மொழியில்லாத் தருணங்கள்...
தளர்ந்த விரல்பிடியை நடுநிசியில்
இறுக்கிக்கொள்ளும் குழந்தையில்
வெகுநாட்கள் கழித்து வீடு திரும்புகையில்
கால்சுற்றும் நாய்க்குட்டியின் பார்வையில்
தேங்கிய மழைநீரில் மிதக்கின்ற
வாடிய மல்லிகைப்பூக்களில்
தொலைதூர பயணத்தின் வழியனுப்புதலில்
வழிகின்ற கண்ணீர்த்துளியில்
புணர்ந்த களைப்பில் நெஞ்சிலுறங்கும்
துணையின் மூச்சுக்காற்றில்
மொழியில்லாத் தருணங்களிலும்
பிறக்கத்தான் செய்கின்றன
கவிதைகள்
நன்றி--நிலாரசிகன்
மொழியில்லாத் தருணங்கள்...
லேபிள்கள்: மொழியில்லாத் தருணங்கள்... | author: செந்திலான்Posts Relacionados:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக